Poem - வருகிறதே வருகிறதே வசந்த காலம் ( varukirathey varukirathey vasantha kaalam)

வன மங்கை ஆடுகிறாள்
மன முவந்து பாடுகிறாள்
குயில் வந்து கூவுதம்மா
குக்கூ குக்கூ குக்கூ . . .         (வன மங்கை)

மலர் கொடிதன் மடியினிலே
மணம் தன்னில் தவழ்ந்து விட்டு
திசை திசையாய் சென்றதம்மா
தென்றல் காற்று ....
தென்றல் காற்று .. .
தென்றல் காற்று ....          (வன மங்கை)

இயற்கை அன்னை திரும்பி விட்டாள்
இளமையிலே குதித்து விட்டாள்
மலர் மாலை அணிந்து கொண்டாள்
மங்கை அங்கே . . . .      
மங்கை அங்கே . . . . 
மங்கை அங்கே . . . .           (வன மங்கை)

வனமெல்லாம் கொண்டாட்டமே
மனமெல்லாம் உற்சாகமே
வருகிறதே வருகிறதே
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . .        (வன மங்கை)


என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha

Snap@Moment - Kanyakumari

Kanyakumari is located at southernmost tip of Indian subcontinent.  It is a sea shore town.  Here three seas are merging ie Arabian Sea, Indian Ocean and Bay of Bengal.  This is one of the most popular tourist places in India.
Vivekananda Rock & Thiruvalluvar Statue

Vivekananda Rock & Thiruvalluvar Statue

Vivekananda Rock & Thiruvalluvar Statue

Vivekananda Rock & Thiruvalluvar Statue

Thiruvalluvar Statue

Location
Kanyakumari Seashore , Kanyakumari District, Tamilnadu, INDIA

Poem - வரதட்சணை (varathakshanai)

மலரை நாடும வண்டிடம்
மலர் நாடவில்லை வரதட்சணை

மலையில் ஓடும் நீரிடம்
மலை ஓதவில்லை வரதட்சணை

மழையை தேடும் பூமியிடம்
மழை தேடவில்லை வரதட்சணை

வனத்தை நாடும் விலங்கிடம்
வனம் நாடவில்லை வரதட்சணை - பின் ஏன்

மனதை பகரும் மனிதனுக்கிடையே
மனத்தை பகைக்கும் வரதட்சணை?

மாலை தென்றலை நுகரும் மனிதனிடம்
தென்றல் நுகரவில்லை வரதட்சணை - பின் ஏன்

மாலை போடும் மைந்தனுக்கு
மங்கையின் மேலொரு வரதட்சணை . . . .


என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha

Poem - ஆகும் உன்னால் ஆகும் (aakum unnal aakum)

ஆகாயம் என்று பரவசபடாதே
ஆகாது என்றும் பரவசபடாதே
ஆகும் உன்னால் ஆகும்
ஆகாயம் வரை ஆட்டிப் படைக்க....

உலகில் ஒரு ஆம்ஸ்ட்ராங் இல்லை
உன்னுள் நீயும் ஒரு ஆம்ஸ்ட்ராங்
உத்தமனாய் ஊக்கத்துடன் விரைந்து வா
உன்னை வரவேற்க வானம் விரைகிறது

உன்னை நீயே சுற்றாதே நண்பா
உலகை நீ சுற்றி வா
உலகில் நீயும் ஒரு மெஹல்லன்
உன்னை போல் ஆயிரம் மெஹல்லனை உருவாக்கு

புதுயுக மானிடனாய் எழுந்து வா
புழுதியில் புழுவாய் அல்ல
புது ஒளி பொழிந்திட வா - உலகை
புதுமையுடன் வாழ வை . . . . .


என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha

Poem - நானும் ஆகணும் உன்னை போல (naanum aakanum unnai pole)

குக்கூ குக்கூ பாடும் குயிலம்மா
தித்தை தித்தை ஆடும் மயிலம்மா
என் பாஷை சொல்லவந்த கிளிபெண்னம்மா
என் ஆசை அள்ளவந்த சிட்டு கண்ணம்மா

கூண்டுக்குள்ளே நீ இருந்து
கூவுகின்ற காரணத்தை கூறு
எந்தன் குயிலம்மா - நான்
உன்னைப் போல பாடணும் . . . .

மழையை தானே காட்ட வந்தாய்
மயிலே மயிலே ஆடம்மா
நடனம் கற்க ஓடி வந்தேன் - நானும்
உன்னை போல ஆடணும் . . . .

பஞ்சவர்ண பட்டுடுத்த  - என்
அஞ்சு வண்ண கிளியே - ஒரு
பட்டு நான் பாட அதை
கேட்டு நீ பாடு . . . .

பூவுக்குள்ளே தேனை அள்ள
பூவைதானே தேடிவந்த சிட்டுக்கண்ணம்மா
தேனுறிய கற்று கொடு
தேனமிர்தம் நானும் தருவேன்





என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha